கொலை வழக்கு: கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை
கர்நாடக பாஜக தலைவர் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


கர்நாடக பாஜக தலைவர் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக பாஜக தலைவரும், தார்வாட் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான யோகேஷ் கௌடா கடந்த 2016ஆம் ஆண்டு, ஜூன் 15ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அம்மாநில காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேரை கடந்த மார்ச் மாதம் சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில் யோகேஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியை அழைத்து சிபிஐ இன்று விசாரணை நடத்தி வருகிறது.
வினய் குல்கர்னி காங்கிரஸ் ஆட்சியின்போது சுரங்கத் தொழில் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...