தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :5 நவம்பர் 2020, 2:15 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் எல்லையில் அத்துமீறி தாக்குதல் மற்றும் பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுப்படுகின்றன. 

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளான ஷாப்பூர், கிர்னி மற்றும் கஸ்பா செக்டாரில் கையெறி குண்டுகளை வீசியும், சிறிய ரக துப்பாக்கிகளைக் கொண்டும் பாகிஸ்தான் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 

துரிதமாக செயல்பட்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.