பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கரோனா அச்சுறுத்தல்: சண்டீகரில் பட்டாசு வெடிக்கத் தடை

கரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு சண்டீகரில் மாநிலத்தில் பட்டாசுகளை வெடிக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

News image
கரோனா அச்சுறுத்தல்: சண்டீகரில் பட்டாசு வெடிக்கத் தடை
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

கரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு சண்டீகரில் மாநிலத்தில் பட்டாசுகளை வெடிக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பு மத்தியில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன.

இந்நிலையில் சண்டீகரில் மாநிலத்தில் கரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசு வெடிப்பு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
பட்டாசு வெடிப்பால் காற்றின் துகள்களில் அதிகரிக்கும் செறிவானது கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.