தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2020, 2:38 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். 

உடனே நமது ராணுவ வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்கப் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.