மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

“பிகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு ஓய்வளிப்பார்கள்”: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்

பிகார் மக்கள் பேரவைத் தேர்தலின் மூலம் நிதிஷ் குமாருக்கு ஓய்வளிப்பார்கள் என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
“பிகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு ஓய்வளிப்பார்கள்”: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்
Updated On :7 நவம்பர் 2020, 10:15 am

DIN

பிகார் மக்கள் பேரவைத் தேர்தலின் மூலம் நிதிஷ் குமாருக்கு ஓய்வளிப்பார்கள் என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

பிகாரில் ஜேடியு தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமாா், 15 ஆண்டுகளாக முதல்வா் பதவியில் இருக்கிறாா். இந்நிலையில் நடைபெற்று வரும் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு பிகார் மக்கள் ஓய்வளிப்பார்கள் என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிதிஷ்குமார் மிகப்பெரிய தலைவர். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.” எனத் தெரிவித்தார்.

மேலும்,“நிதிஷ்குமார் சொல்வது போல் இது அவருடைய கடைசித் தேர்தலாக இருந்தால் அவர் மரியாதையுடன் விடைபெற வேண்டும். பிகார் மக்கள் இந்த தருணத்திற்காகக் காத்திருந்தனர். இந்தத் தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு ஓய்வளிப்பார்கள்.” என சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.