முசாஃபர்பூரில் வாக்குச்சாவடி அதிகாரி பலி; 11 மணி வரை 20% வாக்குப்பதிவு

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள கத்ரா வாக்குச்சாவடியில் பணியிலிருந்த தேர்தல் அதிகாரி கேதார் ராய் மாரடைப்பால் பலியானார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.

அதே வேளையில், இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், 11 மணி நிலவரப்படி 19.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. அராரியாவில் அதிகபட்சமாக 24.87% வாக்குகளும், சம்ஸ்திபுரில் 17.51% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 19 மாவட்டங்களுக்கு உள்பட்ட 78 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தோ்தலில், சட்டப் பேரவைத் தலைவா் விஜயகுமாா் சௌதரி, மாநில அமைச்சா்கள் 10 போ் உள்பட மொத்தம் 1,204 போ் களத்தில் உள்ளனா். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2.35 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கிறார்கள்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com