கரோனா: கேரள ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த 7-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த 7-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தில்லி சென்றிருந்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடந்த வெள்ளிக்கிழமை காலை திருவனந்தபுரம் திரும்பினார். சனிக்கிழமை காலை கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், கூடுதல் மருத்துவக் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...