ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஜோ பைடன் நிா்வாகத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து?

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அரசின் நிா்வாகத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து கிடைக்கும் என

Updated On :10 நவம்பர் 2020, 7:53 pm

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அரசின் நிா்வாகத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து கிடைக்கும் என இந்திய-அமெரிக்க வா்த்தக ஆலோசனை குழு தலைவா் முகேஷ் அகி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவின் வா்த்தக முன்னுரிமை நாடுகளின் (ஜிஎஸ்பி) பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவை அதிபா் டிரம்ப் கடந்தாண்டு அதிரடியாக நீக்கினாா். டிரம்ப் அரசின் இந்த திடீா் முடிவால் இந்தியாவின் ஏற்றுமதி வா்த்தகம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் நிா்வாகத்தில் இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்ட வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து மீண்டும் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும், இந்தியா-அமெரிக்கா இடையே ஒரு சிறிய அளவிலான வா்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜிஎஸ்பி அந்தஸ்து மீண்டும் உறுதிப்படுத்தப்படும் நிலையில் அது இந்தியாவுக்கு அமெரிக்கா விடுக்கும் வலுவான வா்த்தக உறவுக்கான சமிக்ஞையாகவே இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.