ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகார் தேர்தல் வெற்றி: நிதிஷ் குமாருக்கு தலாய் லாமா வாழ்த்து

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு திபெத் புத்த மதத் தலைவர்  தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
திபெத் புத்த மதத் தலைவர்  தலாய் லாமா (கோப்புப்படம்)
Updated On :11 நவம்பர் 2020, 1:11 pm

DIN

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், ''உங்களது நட்பிற்கும், பிகார் வரும்போது கொடுக்கப்படும் விருந்தோம்பலுக்கும் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பண்டைய இந்திய சிந்தனைகள் குறித்த எனது ஆர்வம் மற்றும் அதனை கொண்டு சேர்க்கும் எனது முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். 

பிகார் மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நீங்கள் சந்திக்கும் சவால்களில் வெற்றி பெறுவதற்காக வேண்டிக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பிகாரில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.