சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரளம்: பொதுமுடக்கத்தில் 2,800 குடும்ப வன்முறைப் புகார்கள் பதிவு

கேரளத்தில் பொதுமுடக்க காலத்தில் 2,800 குடும்ப வன்முறைப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image
கேரளம்: பொதுமுடக்கத்தில் 2,800 குடும்ப வன்முறைப் புகார்கள் பதிவு (கோப்புப்படம்)
Updated On :11 நவம்பர் 2020, 6:31 am

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் பொதுமுடக்க காலத்தில் 2,800 குடும்ப வன்முறைப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொற்று குறைவதற்கேற்ப தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.

எனினும் கேரளத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரண்டாவது முறையாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 
இதனிடையே கேரளத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 2,868 குடும்ப வன்முறைப் புகார்கள் பதிவாகியுள்ளதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பதிவான இந்த வழக்குகளில் 2,757 வழக்குகள் அந்தந்த மாவட்ட காவல்துறை மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்குள்ள காவல் தலைமையகத்திற்கு பொறுப்பான இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) மற்றும் மகளிர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் உதவியுடன் மீதமுள்ள 111 புகார்கள் தீர்த்து வைக்கப்படும் என்று மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட அளவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரச்னை தீர்வு மையத்தின் உத்தரவின் பேரில், வீட்டு வன்முறை தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்காக இணையம் மூலம் உருவாக்கப்பட்ட தளத்தில் டிஜிபி பங்கேற்று பலரது குறைகளைக் கேட்டுத் தீர்வுகளை பரிந்துரைத்தார். 

இந்த புதிய முறை மூலம் குடும்பத்தினருக்கிடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுவதாகவும் என்றும் புகார்கள் குறித்து எதிர்தரப்பினர் வெளிப்படையாக பேசும்போது தீர்வு உருவாகும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.