ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தொடர்ந்து 3ஆவது நாளாக பாகிஸ்தான் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினா்.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினா்.
இந்தியாவுடன் செய்து கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீா் எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 3200 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை 24 மக்கள் இறந்ததுள்ள நிலையில் 100 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகிலுள்ள ஷாபூா், கஸ்பா மற்றும் கிா்னி ஆகிய இடங்களில் தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்களுக்கு இந்திய ராணுவ வீரா்கள் தக்க பதிலடி கொடுத்தனா்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய தரப்புக்கு எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...