அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் உ.பி. அரசு

உத்தரப்பிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

News image
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
Updated On :12 நவம்பர் 2020, 10:37 am

DIN

லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமஸ்கிருதப் பள்ளிகளை நவீனப்படுத்தி மேம்பாடு அடையச் செய்யும் வகையிலான பணிகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செய்து வருகிறது.

சமஸ்கிருத பள்ளிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னுரிமை அளிப்பதாக உத்தரப்பிரதேச சமஸ்கிருத சங்கத்தின் தலைவர் டாக்டர் வசஸ்பதி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.   

மேலும், உத்தரப்பிரதேச அரசு தமது அறிக்கைகளை சமஸ்கிருத மொழியிலேயே வெளியிடுவதாகவும் கூறினார். 

சமஸ்கிருதப் பள்ளிகளில் கணினி வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 72 மாவட்டங்களில் உள்ள சமஸ்கிருதப் பள்ளிகளில்  உத்தரப்பிரதேச சமஸ்கிருத சங்கத்தின் சார்பில் கணினி வசதி ஏற்டுத்தப்பட்டது. எஞ்சிய பள்ளிகளில் இந்த முறை கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் சமஸ்கிருத மொழியை எளிமையாக கற்கலாம் என்றும், கணினி அறிவும் புகுத்தப்படும் என்றும் மிஸ்ரா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.