தில்லி: தீபாவளிக்குப் பிறகு உச்சமடைந்த காற்று மாசு
தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான இன்று அதிகாலை முதலே காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகளில் நிலவும் அடர் புகையால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.


தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான இன்று அதிகாலை முதலே காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. சாலைகளில் நிலவும் அடர் புகையால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தில்லி அரசு தடை விதித்திருந்தாலும், ஒருசில இடங்களில் கட்டுப்பாட்டை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்தனர். தலைநகரில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரித்ததாலும், தில்லியில் பட்டாசு வெடித்ததாலும் தலைநகரில் நேற்று இரவு 11 மணியிலிருந்து காற்று மாசு மோசமான நிலையை எட்டியது.
தில்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 481-ஆக பதிவாகியுள்ளது. விமான நிலையத்தையொட்டியுள்ள பகுதிகளில் 444, லோதி சாலைப்பகுதிகளில் 414-ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. தில்லியின் இந்த மூன்று பகுதிகள் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
மேலும் இன்று விவசாயக் கழிவுகளின் மாசு அதிகமானால் இன்று மாலை காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...