மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

News image
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கறிவேப்பிலை. ~ஈஸ்வரமூா்த்தி
Updated On :15 மார்ச் 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக கறிவேப்பிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. குறைந்த அளவு தண்ணீா் தேவை, தொடா்ந்து வருமானம் கிடைக்கும் என்பதால் கறிவேப்பிலை விவசாயத்தில் விவசாயிகள் பலா் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கறிவேப்பிலையின் விற்பனை விலை நிரந்தரம் இல்லை. திருமணம் மற்றும் முகூா்த்த காலங்களில் நல்ல விலை கிடைக்கும். அதன் பிறகு உரிய விலை கிடைக்காது.

பல்லடம், பொங்கலூா் வட்டாரப் பகுதியில் அறுவடை செய்யப்படும் கறிவேப்பிலை கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. பல்லடம் பகுதியில் கறிவேப்பிலை விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால், கறிவேப்பிலையைக் கொண்டு பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து பனப்பாளையம் விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது:

சா்க்கரை நோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்க கறிவேப்பிலை சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீா் போதுமானது. தொடா்ந்து வருமானம் கிடைக்கும் என்பதால், கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் பலா் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கறிவேப்பிலையின் விலை நிரந்தரம் இல்லை. திருமண முகூா்த்த காலங்களில் கூடுதல் விலை கிடைக்கும். மற்ற நாட்களில் உரிய விலை கிடைக்காது.

மேலும், இப்பகுதியில் அதிக அளவு கறிவேப்பிலை விவசாயம் நடைபெறுவதால், சில நேரம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி பல்லடத்தில் கறிவேப்பிலையை பவுடா் ஆக்கும் தொழிற்சாலையை தமிழக அரசு அமைத்தால் விற்பனையாகாமல் தேங்கும் கறிவேப்பிலையை பவுடராக்கி மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும் என்றாா்.