தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காஷ்மீரின் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கை

காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News image

காஷ்மீரின் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கை

Updated On :16 நவம்பர் 2020, 9:21 am

PTI


ஸ்ரீநகர்: காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த பனிமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வடக்குக் காஷ்மீரின் குப்வாரா, பந்திப்போரா, பாரமுல்லா, மற்றும் வடக்குக் காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களுக்கு பலத்த பனிச்சரிவு அபாய எச்சரிக்கையும், கந்தெர்பால் மற்றும் பாரமுல்லாவுக்கு குறைந்த அளவிலான பனிச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை காலை வரை பனிப்பொழிவு தொடர்ந்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குல்மர்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 செ.மீ. பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.