தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குப்கர் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு: பாஜக கேள்வி

​ஜம்மு காஷ்மீரில் குப்கர் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருப்பது குறித்து பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

News image

செய்தியாளர்களைச் சந்தித்த ரவிசங்கர் பிரசாத்

Updated On :16 நவம்பர் 2020, 11:16 am

DIN


ஜம்மு காஷ்மீரில் குப்கர் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருப்பது குறித்து பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மேலும் தெரிவித்ததாவது:

"குப்கர் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இருப்பதால் அவர்களிடம் எங்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன. காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். நாங்கள் அதைக் கேள்வி கேட்கவில்லை. ஆனால், நோக்கத்தினைக் கேள்வி கேட்கலாம்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐத் திரும்ப அமல்படுத்த சீனா ஆதரவு அளிக்கும் என்று ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை வெளிப்படுத்தினார். சட்டப்பிரிவு 370-ஐத் திரும்ப கொண்டுவராமல் ஜம்மு-காஷ்மீரில் மூவர்ணக் கொடி பறக்காது என மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.

தேசிய சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஊழலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம் என்பதுதான் யோசனையாக உள்ளதா எனக் கேளியெழுப்ப விரும்புகிறேன்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.