குஜராத்: மருத்துவமனையில் தீ விபத்து
குஜராத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குஜராத்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து (கோப்புப்படம்)

குஜராத்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து (கோப்புப்படம்)
சூரத்: குஜராத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குஜராத் மாநிலம் நான்புரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையின் தரைத்தள சர்வர் அறையில் ஏற்பட்ட இந்த தீ வேகமாக முதல் தளத்திற்கும் பரவியது.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் இருந்து 16 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...