தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன்

கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரை நவ.23-ல் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :21 நவம்பர் 2020, 4:05 pm

DIN

கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரை நவ.23-ல் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது டி.கே.சிவக்குமார் வருமானத்துக்கு பொருத்தமில்லாத சொத்துக் குவித்ததாக கடந்த செப். 30-ஆம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதோடு டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து ரூ. 57 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்த டி.கே.சிவக்குமாா், தன் வீட்டில் ரூ. 1.77 லட்சம் மட்டுமே இருந்ததாகக் கூறியிருக்கிறாா். இந்த நிலையில் ரூ. 50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நவ.23-ல் நேரில் ஆஜராக சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.