இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பரவல் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இது ஒருநாளில் அதிகபட்ச கரோனா பரிசோதனை ஆகும். மொத்தமாக இன்று (நவ.21) வரை நாடு முழுவதும் 13,17,33,134 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டதில், புதிதாக 42,779 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு 90,93,376 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மேலும் 501 பேர் உள்பட 1,33,227 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.
இதுவரை கரோனாவிலிருந்து 85,21,617 பேர் குணமடைந்தனர். தற்போது 4,40,962 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டிய விஜய்! | TVK | KKD
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பலி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


