புது தில்லி: நாட்டில் கரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்று கவலை தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் குஜராத் மற்றும் தில்லி போன்ற இடங்களில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், குஜராத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நவம்பர் மாதத்தில், தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே, கரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு, தில்லி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் சஞ்சய் ஜெயினுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. 24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்
கரோனா நோயாளிகளுக்கு சீரான சிகிச்சை மற்றும் கரோனாவால் பலியானோரின் உடலை மரியாதையான முறையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


