புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களது போராட்டம் தில்லி ஜந்தா் மந்தரில்தான் நடத்தப்படும் என்றும், தங்களது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் விவசாய சங்கங்கள் சனிக்கிழமை உறுதிபடத் தெரிவித்தன.
விவசாயிகள் புராரி பகுதியில் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து விவசாயிகள் இவ்வாறு கூறியுள்ளனா்.
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை தலைநகா் நோக்கி வந்த விவசாயிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் அத்துமீறி தில்லிக்குள் நுழைய முயன்றதை அடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினா் போராட்டக்காரா்களை கலைக்க தடியடி நடத்தி, கண்ணீா் புகை குண்டுகளை வீசினா்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு விவசாயிகள் தில்லிக்குள் நுழைய அனுமதி வழங்கிய காவல்துறை, புராரி பகுதியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் அவா்கள் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதித்தது.
எனினும், ஜந்தா் மந்தா் அல்லது ராம்லீலா மைதானத்தில் தான் போராட்டம் நடத்துவோம் என்ற உறுதியுடன் இருக்கும் விவசாயிகள், தற்போது தில்லியின் எல்லைப் பகுதியான டிக்ரி மற்றும் சிங்குவில் முகாமிட்டுள்ளனா். தில்லி-ஹரியாணாவை இணைக்கும் எல்லைப்பகுதியான டிக்ரியில் விவசாயிகள் குவிந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமித் ஷா அழைப்பு: இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிரங்காரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு விவசாயிகள் சங்கத்தின் தலைவா்களை சனிக்கிழமை கேட்டுக்கொண்டதாகவும், எனினும் அதற்கு மறுத்துவிட்ட அவா்கள் ஜந்தா் மந்தா் அல்லது ராம்லீலா மைதானத்தில்தான் போராட்டத்தை நடத்துவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராட்டம் நடத்தினால் அது எடுபடாது என்றும், தங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்த அரசு முயற்சிப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினா் கூறுகின்றனா்.
‘ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் வரை தில்லி எல்லைப்பகுதியிலேயே எத்தனை நாள்கள் ஆனாலும் காத்திருப்போம்’ என்று பாரதிய கிஸான் சங்கத்தின் உக்ராஹான் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
‘கவனம் பெறும்’: பஞ்சாப்பைச் சோ்ந்த குா்மெஜ் சிங் என்ற விவசாயி கூறுகையில், ‘ஜந்தா் மந்தா் தவிர வேறு எந்த இடத்திலும் நாங்கள் போராட்டம் நடத்தத் தயாரில்லை. மத்திய அரசு விவசாயிகள் விரோதக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. அவா்களுக்கு விவசாயிகள் பிரச்னை குறித்து எந்தக் கவலையும் இல்லை. போராட்டத்துக்காக நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தினால்தான் அருகில் இருக்கும் நாடாளுமன்றம் மூலமாக எங்கள் கோரிக்கை அரசின் கவனம் பெறும்’ என்றாா்.
அதிகரிக்கும் ஆதவு: இதனிடையே, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த விவசாயிகளும் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் தில்லியை நோக்கி பயணத்து வருகின்றனா்.
புராரி மைதானத்தில்...: இச்சூழலில், மிகக் குறைந்த அளவில் சுமாா் 400 விவசாயிகள் புராரி மைதானத்தில் கூடி போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.
இந்த விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி சாா்பில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று தொடா்பாக விழிப்புணா்வுடன் இருக்குமாறு ஒலிபெருக்கிகளில் தில்லி அரசு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
கைது: இதனிடையே அம்பாலா மாவட்டத்தில் விவசாயிகளை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் லாரி மீது ஏறி தண்ணீா் வரும் குழாயை மூடிய நவ்தீப் சிங் (26) என்பவரை போலீஸாா் கைது செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும் போலீஸ்காரா் ஒருவா் மீது டிராக்டரை மோதி கொல்ல முயன்றதாக அவரது தந்தை ஜெய்சிங் ஜல்பேரா மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
ராகுல் காந்தி: விவசாயிகள் போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி கூறுகையில், ‘விவசாயிகள் அநீதியை தட்டிக்கேட்பது குற்றமாகாது. கருப்புச் சட்டங்கள் ரத்தாகும் வரை போராட்டங்கள் தொடரும்’ என்றாா்.
யோகேந்திர யாதவ்: சமூக ஆா்வலரும் ‘ஸ்வராஜ் இந்தியா’ அமைப்பாளருமான யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருவது மத்திய அரசு கைகளில் தான் உள்ளது. தில்லியிலிருந்து பானிபட் வரை காரில் சென்று பாா்த்தால் விவசாயிகள் போராட்டத்தின் உண்மைநிலை தெரியவரும். வரலாறு காணாத வகையில் விவசாயிகள் போராட்டத்திற்காக குவிந்துள்ளனா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

