தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி. வன்கொடுமை: முதல்வர் அலுவலகம் முற்றுகை; காவல்துறை தடியடி

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து சமாஜ்வாதி கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

News image

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து சமாஜ்வாதி கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  காவல்துறையினர் தடியடி

Updated On :1 அக்டோபர் 2020, 9:07 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து சமாஜ்வாதி கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமாஜ்வாதிகட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்கள் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணின் உடற்கூறாய்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாலும், மருத்துவ அறிக்கையில் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சமாஜ்வாதி கட்சியினர் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அலுவலகத்தை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் அலுவலகத்தை நெருங்கிய போராட்டக்குழுவினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.