தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேளாண் சட்டம்: அக். 4, 5,6 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி டிராக்டர் பேரணி

வேளாண் சட்டத்தை கண்டித்து வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி தொடர் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :2 அக்டோபர் 2020, 7:54 am

வேளாண் சட்டத்தை கண்டித்து வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி தொடர் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளார்.

ஏற்கனவே 3, 4, 5 ஆகிய தேதிகளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேரணி நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்ளுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கொண்டுசெல்லவும் ராகுல்காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

இதன்படி அக்டோபர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு 3, 4, 5 ஆகிய தேதிகளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பேரணி நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் ஆலோசகர் ரவீன் துக்ரல் சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது, ''ராகுல்காந்தி டிராக்டர் பேரணி 4, 5, 6 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நிகழ்ச்சிகள் திட்டமிட்டப்படி நடைபெறும்'' என்று பதிவிட்டுள்ளார்.

''மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குரலாக ஒலிக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்'' என்று காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்று நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு டிராக்டர் பேரணி தொடங்கும் என்றும், பஞ்சாபில் தொடங்கும் இந்த பேரணி 6-ஆம் தேதி ஹரியாணாவில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.