ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்
ராஜஸ்தானில் சஹாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கைலாஷ் சந்திரா திரிவேதி இன்று காலமானார்.


ராஜஸ்தானில் சஹாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கைலாஷ் சந்திரா திரிவேதி இன்று காலமானார்.
ராஜஸ்தான் மாநிலம், சஹாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கைலாஷ் சந்திரா திரிவேதி(65). இவருக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இன்று காலமானார். கைலாஷ் சந்திரா திரிவேதி கரோனாவிலிருந்து மீண்டு நுரையீரல் பிரச்னை காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அவரது மறைவுக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...