மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாப்: 14-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 14-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் 14-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

Updated On :7 அக்டோபர் 2020, 6:47 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 14-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் மத்திய அரசால் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி, மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாபில் விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், 14வது நாளாக தொடர்ந்து தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்  பகுதியில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் சமிதியை சேர்ந்த விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.