மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவா: ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் ஒருவர் பலி

கோவாவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :10 அக்டோபர் 2020, 8:29 am

கோவாவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவாவின் பனாஜி பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த வாயுக் கசிவை சுவாசித்ததில் ஒருவர் ஆலையிலேயே உயிரிழந்தார்.

மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக கோவா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.