ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் ரம்பாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் ரம்பாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு பேரில், ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாதி சைபுல்லா என்றும் மற்றொருவர் உள்ளூரைச் சேர்ந்தவன் என்று மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் சைபுல்லா சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் ஆவார். அண்மையில் நாவ்காமில் நடந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...