காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா உறுதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குலாம்நபி ஆசாத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த நாள்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...