அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: பட்டியலின சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலின சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
உ.பி.: பட்டியலின சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை (கோப்புப்படம்)
Updated On :16 அக்டோபர் 2020, 1:11 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலின சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து இன்று காலை மற்றொரு பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்.

இதனிடையே இன்று மாலையே பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்செண்டி பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதைக்காக வயலுக்குச் சென்றுள்ளார். 

அப்போது கோவிந்த்(19), சிவ் போதன் (30)  ஆகிய இருவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் சச்செண்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த பரிசோதனை அறிக்கை இன்னும் வராத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள்   விரைந்து   கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.