இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவத்தினரிடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை காலை ஜம்மு காஷ்மீரின் பன்சார்-மன்யாரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதனால் அப்பகுதி மக்கள் நிலத்தடி பதுங்குக் குழிகளில் தஞ்சம் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு கடுமையாக பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட இருதரப்பு பாதிப்பு குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வரை பாகிஸ்தானின் 3,589 போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 427 போர்நிறுத்த மீறல்களும், மார்ச் மாதத்தில் 411 மற்றும் ஆகஸ்டில் 408, ஜூலை மாதம் 398 போர் நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 62 போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...