தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெலங்கானா வெள்ள பாதிப்பு:அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் அறிவித்தாா்.

News image

தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ்

Updated On :19 அக்டோபர் 2020, 10:39 pm

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 வழங்கப்படும். பலத்த மழையால் இடிந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம், பகுதியளவில் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அளிக்கப்படும்.

ரூ.10,000 நிவாரணத் தொகை செவ்வாய்க்கிழமை (அக்.20) முதல் தரப்படும்.

இந்தப் பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட இடங்களுக்கு குழுக்களை அனுப்புமாறு ஹைதராபாத் மற்றும் அந்த மாவட்ட அதிகார வரம்புக்குள் வரும் ரெங்காரெட்டி, மெட்சால் மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்பாா்வையிட மாநில தலைமைச் செயலா் சோமேஷ் குமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை துரிதமாக சீரமைத்து, விரைவில் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.