மகாராஷ்டிரத்தில் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞர் கைது
மகாராஷ்டிரத்தில் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்திலுள்ள நல்ல சோப்ரா பகுதியில் 22 வயதான விற்பனையாளர் ஒருவர், அப்பகுதியில் உள்ள 3 வயது குழந்தையுடன் விளையாடுவதுபோன்று குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
தனியாக உள்ள இடத்திற்கு கொண்டுசென்று குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் அவர் ஈடுபட்டுள்ளார். பின்னர் உடலில் இருந்த காயங்கள் குறித்து பெற்றோரிடம் குழந்தை தெரிவித்ததையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் இளைஞருக்கு அக்டோபர் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...