தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாஜகவிலிருந்து விலகிய ஏக்நாத் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்

பாஜகவிலிருந்து விலகிய மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே சரத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

News image

பாஜகவிலிருந்து விலகிய ஏக்நாத் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்

Updated On :23 அக்டோபர் 2020, 11:06 am

DIN

பாஜகவிலிருந்து விலகிய மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே சரத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பாஜகவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அக்கட்சியை வலுப்படுத்தி வந்த மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே தேவேந்திர பட்னாவிஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏக்நாத் இணைய உள்ளதாக அன்றைய நாளே தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜெயந்த் பாட்டீல் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அவர் கட்சியி  இணைவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் முன்னிலையில் இன்று பிற்பகல் ஏக்நாத் கட்சே கட்சியில் இணைந்தார். அவருக்கு பொன்னாடைப் போர்த்தி கட்சியில் ஜெயந்த் பாட்டீல் வரவேற்றார். 

இதனையடுத்து பேசிய ஏக்நாத் கட்சே, பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியதாகக் கூறினார். எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்கும் நோக்கில் பட்னாவிஸ் செயல்பட்டதாகவும் ஏக்நாத் குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.