பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: சாலை விபத்தில் மூவர் பலி; 8 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாகாணத்தில் பயணிகளுடன் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்: சாலை விபத்தில் மூவர் பலி; 8 பேர் படுகாயம்
Updated On :23 அக்டோபர் 2020, 12:39 pm

DIN

ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாகாணத்தில் பயணிகளுடன் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோடா மாகாணத்தின் பல்வேறு இடங்கள் மலைப்பகுதிகளாகவே உள்ளன. இதனிடையே கில்னி பகுதியிலிருந்து ஹம்பல் கிராமத்திற்கு பயணிகளுடன் ஜீப் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, டொமைல் பகுதி அருகே சென்றுக்கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஏராளமான மலைப்பாதைகளை உள்ளடக்கிய தோடா மாகாணத்தில் சாலைகள் சரிவர பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.