பாகிஸ்தான், சீனாவுடன் போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சர்ச்சைப் பேச்சால் இந்தோ-சீன எல்லையில் ராணுவப் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நாடு எப்போது போரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.
ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றி பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கியது ஆகியவற்றைப் போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எப்போது போர் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
மேலும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசினார்.
இந்த கருத்துக்கள் குறித்து உள்ளூர் எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா கேட்டபோது, உத்தரப்பிரதேச பாஜக தலைவர் கட்சி ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதாகக் குறிப்பிட்டார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தோ - சீனா எல்லையில் பதற்றம் நீங்கவே இந்தியா விரும்புவதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பில்லீ ஜீன் கிங் டென்னிஸ்: இந்திய அணியில் வைஷ்ணவி

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு சொந்த மைதானத்தில் 5 ஆட்டங்கள்

தில்லி மருத்துவமனையில் மூவருக்கு கத்திக் குத்து; நான்கு போ் கைது

நடப்பு சாம்பியனை வீழ்த்தி லக்ஷயா சென் அபாரம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

