மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத் இடைத்தேர்தல்: வேட்பாளர்களின் சொத்துகள் எவ்வளவு?

குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர் லட்சாதிபதிகள் என்பது தெரியவந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 அக்டோபர் 2020, 11:20 am

DIN

குஜராத் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25% பேர் லட்சாதிபதிகள் என்பது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து அப்தாசா, லிம்ப்டி, மோர்பி, தாரி, கடதா, கர்ஜன், டாங் மற்றும் கப்ராடா ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பிரமாணப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  8 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ 4.38 கோடியும், 8 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.52 கோடியும், பாரதிய பழங்குடியினர் கட்சியின் 2 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.17.88 லட்சமும் உள்ளது.

53 சுயேட்சை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.70.52 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த வேட்பாளர்களில் 61 சதவீதம் வேட்பாளர்கள் தங்கள் கல்வித் தகுதியை 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை குறிப்பிட்டுள்ளனர். 25 சதவீதம் வேட்பாளர்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கல்வித் தகுதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மூன்று (4%) பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.