வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வடமாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடமாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மத்திய கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசா, பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனிடையே பிகார், மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசா, மேற்கு அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 12 மணிநேரத்திற்கு தொடர்மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒடிசாவில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...