ஆகஸ்ட் மாதத்தில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழைப்பொழிவு
இந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்தியாவில் பதிவான ஒட்டுமொத்த மழைப்பொழிவு வழக்கமான இயல்பை விட 10 சதவீதம் அதிகம் என்று ஐஎம்டி திங்களன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரி இயல்பை விட 27 சதவீதம் அதிக மழை பெய்தது. இது கடந்த 120 ஆண்டுகளில் பொழிந்த நான்காவது மிக உயர்ந்த அளவு மழைப்பொழிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1926 ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 33 சதவீதம் அதிக மழை பெய்தது. 1976ஆம் ஆண்டு 28.4 சதவீதமும் 1973 ஆகஸ்டில் 27.8 சதவீதமும் அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. நடப்பாண்டு 27 சதவீதம் மழை பெய்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் வங்காள விரிகுடாவில் ஐந்து தாழ்வழுத்தப் பகுதிகள் உருவாகியதால் அதிக மழை பெய்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 10 சதவீத பற்றாக்குறையுடனும், ஜூன் மாதத்தில் வழக்கமான இயல்பை விட 17 சதவீதம் அதிக மழையும் பதிவாகியுள்ளன.
தொடர்ச்சியான மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் கடந்த மாதத்தில் வெள்ள பாதிப்பை சந்தித்தன.
மழைப்பொழிவானது வழக்கமான இயல்பை விட நாட்டின் வடமேற்கு பகுதியில் 9 சதவீதம் குறைவாகவும், மத்திய இந்தியப் பகுதியில் 21 சதவீதம் அதிகமாகவும், தென்பகுதியில் 20 சதவீதம் அதிகமாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 2 சதவீதம் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...