மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது: உச்ச நீதிமன்றம்

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது: உச்ச நீதிமன்றம்
Updated On :2 செப்டம்பர் 2020, 8:01 am

DIN

புது தில்லி: இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் இருவரது வழக்கில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பணியிடங்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.