உ.பி.யில் வெள்ளத்தால் 35 பேர் பலி
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உத்தரபிரதேசத்தின் நிவாரண ஆணையர் சஞ்சய் கோயல் கூறுகையில்,
இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் 28 வரை உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 16 விலங்களும் பலியாகியுள்ளது.
இதில், பஹ்ரைச்சி 14 பேர், லக்கிம்பூர் கிரி 6 பேர், பால்ரம்பூரி 4 பேர், பரபன்கி 3 பேர், சாண்ட் கபீர்நகர் 3 பேர், மற்றும் அம்பேத்கர் நகர், அசாம்கர், பல்லியா, ஷாஜகான்பூர் மற்றும் சீதாபூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களில் 569 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, இந்தப் பகுதிகளில் 157 வீடுகளும், 558 குடிசைகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...