தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி.யில் புதிதாக 6,239 பேருக்கு கரோனா; மேலும் 80 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,239-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் உயிரிழந்தனர்.

News image

உ.பி.யில் புதிதாக 6,239 பேருக்கு கரோனா; மேலும் 80 பேர் பலி

Updated On :13 செப்டம்பர் 2020, 11:17 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,239-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 6,239 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,12,036-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 68,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து இதுவரை 2,39,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 80 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,429-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.