கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

News image

கோப்புப்படம்

Updated On :14 செப்டம்பர் 2020, 11:10 am

DIN

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று காலை மக்களவை கூடிய நிலையில் பிற்பகல் மாநிலங்களவை கூடியது. 

கூட்டத்தின் தொடக்கத்தில், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.  எம்.பி.க்கள் மூவருக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

தொடர்ந்து, அக்டோபர் 1 ஆம் தேதி வரை 18 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதனிடையே, கடந்த இரு நாள்களாக எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் 17 மக்களவை எம்.பி.க்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.