ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லியில் புதிதாக 4,473 பேருக்கு கரோனா: மேலும் 33 பேர் பலி

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,473 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 செப்டம்பர் 2020, 2:07 pm


தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 4,473 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,473 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,30,269 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 33 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,839 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை மொத்தம் 1,94,516 பேர் குணமடைந்துள்ளனர். 30,914 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இன்று மட்டும் 62,593 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 23,09,578 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.