கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

8 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்

​மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் ஒருவாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 12:53 pm

DIN


மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் ஒருவாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த இடைநீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் காலையிலிருந்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரை ஒரு வாரத்துக்குப் பதிலாக மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.