தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுரேஷ் அங்கடி மறைவு: அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி

மறைந்த ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியில் உள்ள அரசு கட்டடங்களில் இன்று தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

News image

சுரேஷ் அங்கடி மறைவு

Updated On :24 செப்டம்பர் 2020, 9:07 am

DIN

புது தில்லி: மறைந்த ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியில் உள்ள அரசு கட்டடங்களில் இன்று தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி.அங்கடி, புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியில் பல்கலைக்கழகத்தில் (எய்ம்ஸ்) செப்டம்பர் 23ம் தேதி உயிரிழந்தார்.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தில்லியில் வழக்கமாக தேசியக் கொடி பறக்கும் கட்டடங்களில், தேசியக் கொடி செப்டம்பர் 24ம் தேதி (இன்று) அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

மேலும், இறுதிசடங்கு நடைபெறும் இடத்திலும் அன்றைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். இறுதி சடங்கு நடைபெறும், நாள், நேரம், இடம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.