ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பஞ்சாப்: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மறுக்க வேண்டாம்

எந்த சூழலில்லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 செப்டம்பர் 2020, 12:00 pm

DIN

சண்டிகர்: எந்த சூழலில்லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விகிதம் 15.61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை 3,44,986 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.

இது குறித்து பேசிய பஞ்சாப் பள்ளிக் கல்வித்துறை செய்தித்தொடர்பாளர், அதிக அளவிலான மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து புகார் வருவதாக கூறினார்.

இதனால் அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் இடமளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கிஷன் குமார் தெரிவித்துள்ளார். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை பள்ளிகளில் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு ஏற்ப பணிநேரத்தை காலை மாலை என இரண்டாக பிரித்துக்கொள்வது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை கட்டாயம் கேட்கவேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலான மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ படிவத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.