சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

'தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை இலங்கை உணர்ந்துகொள்ள வேண்டும்'

இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை உணர்ந்துகொள்ள பிரதமர் ராஜபட்சவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

News image
இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான காணொலி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
Updated On :26 செப்டம்பர் 2020, 10:25 am

DIN

இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் ராஜபட்சவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான காணொலி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவு ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்தது. இரு நாடுகளும் அந்த உறவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. எனது அழைப்பை ஏற்று உச்சிமாநாட்டில் கலந்துகொண்டமைக்கு நன்றி என்று கூறினார்.

அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையிலும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் இந்திய அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை உணர்ந்துகொள்ள முன்வரவேண்டும்'' என்று பிரதமர் மோடி கூறினார்.

இதில் பேசிய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, ''கரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் பொதுநலத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இலங்கையின் பிரதமாராக ஆகஸ்ட் 9-ஆம் தேதி பதவியேற்ற பிறகு இந்தியாவுடன் முதல் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.

இலங்கை கடற்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் இந்திய கடற்படையினர் சிறப்பான முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்'' என்று ராஜபட்ச கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.