பெங்களூருவில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு வங்கி வட்டம் மற்றும் டவுன் ஹால் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிற்சங்களைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில், 'கர்நாடக ரக்ஷ்னா வேதிக்' ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். நெடுஞ்சாலைகள், சுங்கச் சாவடி இருக்கும் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, கே.ஆர்.புரம், சுமனஹள்ளி சந்திப்புகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டம் நடந்த இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பெங்களூரு நகரம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...