

கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் மே 3 ஆம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்? என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
► உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் விமான சேவை அனைத்தும் மே 3 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
► நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடரும்.
► பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை ரத்து தொடரும்.
► மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து. அதே நேரத்தில் மருத்துவத் தேவைக்காக மட்டும் அனுமதி வழங்கப்படும்.
► அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், பயிற்சிக் கூடங்கள் அனைத்துமே மே 3 வரை செயல்பட அனுமதி இல்லை.
► ஆட்டோ, கால் டாக்சி, ரிக்ஷா உள்ளிட்டவைகளுக்கான தடை தொடரும்.
► திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கடைகள், கலை நிகழ்ச்சிக் கூடங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தடை தொடரும்.
► சமூக, அரசியல் நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள், திருமணங்ககளுக்குத் தடை நீட்டிப்பு.
► மதரீதியான கூட்டங்கள் எதுவும் மே 3 வரை நடத்தக் கூடாது.
► இறுதிச்சடங்கு நடத்த தடையில்லை. ஆனால், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளுக்கும் அனுமதி
கூரியர், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மத்திய அரசு
ஊரடங்கு நீட்டிப்பு: விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.