அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தொடங்கியது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை தொடங்கியது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தொடங்கியது
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தொடங்கியது


உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை தொடங்கியது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

விழா நடைபெறும் மேடையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட சிலர் தனிமனித இடைவெளியுடன் மேடையில் அமர்ந்து பூஜையில் பங்கேற்றுள்ளனர்.

வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க, ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னா் 40 கிலோ வெள்ளி செங்கற்களை எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைக்கிறாா்.

பூமி பூஜைக்காக பல்வேறு ஆன்மிகச் சிறப்புமிக்க தலங்களில் இருந்து மண்ணும் பல நதிகளிலிருந்து புனித நீரும் வந்தவண்ணம் உள்ளன.

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தியில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பங்கேற்க ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு மாநில முதல்வா்கள், ராமஜென்மபூமி இயக்க நிா்வாகிகள், ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் என 175 முக்கிய பிரமுகா்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 
ராமா் கோயிலுக்கான பூா்வாங்க பூஜைகள் திங்கள்கிழமை காலை கௌரி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக, வேத விற்பன்னா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் தவிர வேறு யாரும் அதில் அனுமதிக்கப்படவில்லை.

ராமா் கோயில் பூமி பூஜையின் நினைவாக ஸ்ரீராமா் ஜென்மபூமி மந்திா் என்ற பெயரில் சிறப்புத் தபால்தலையை பிரதமா் வெளியிடுகிறாா்.

தூா்தா்ஷனில் நேரடி ஒளிபரப்பு: பூமி பூஜை விழா காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தா்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் விழாவைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பூமி பூஜை நிகழ்ச்சி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com